பல்லாவரம் ரயில் நிலையத்தில், பழ வியாபாரம் செய்யும் பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடந்துக்கொண்ட கும்பலை தட்டிக் கேட்ட வாலிபரை, அந்த கும்பல் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமமூர்த்தி என்பவரை தாக்கி, அவரது செல்போன், ரூ. 5 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்த அக்கும்பலை சேர்ந்தவர்கள், பழ வியாபாரம் செய்து வரும் பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.
அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து அவரை தூக்கிச் சென்று கற்பழிக்கவும் அக்கும்பல் திட்டம் போட்டு செயல்பட்டது. இதனை தட்டிக்கேட்ட போது. அப்போது இதனை ஜான்சன் என்ற வாலிபர் தட்டிக்கேட்டார். போதையில் இருந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல், நீ என்ன பெரிய ஆளா என்று கேட்டு அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் பொது மக்கள் முன்னிலையிலேயே அக்கும்பல் ஜான்சனை சரமாரியாக தாக்கியது. இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை 4 பேரும் சேர்ந்து தண்டவாளம் வழியாக தரதரவென இழுத்துச் சென்றனர்.
பின்னர் ரயில் நிலையம் அருகில் புதர் மண்டி கிடக்கும் பகுதியில் வைத்து ஜான்சனை அவர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்கள்.
இந்த சம்பவத்தால், பெண் பயணிகளிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மக்களிடையே ஏற்பட்ட பீதி குறைந்தபாடியில்லை.
இந்த நிலையில், கொலைக்காரகள் யார்? என்பதை அடையாளம் கண்டுள்ள போலீஸ், அவர்களை விரைவில் கைது செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்று தருவோம், என்று தெரிவித்துள்ளது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக ரயில்வே உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜான்சனை குத்தி கொலை செய்த வாலிபர்கள் அப்பகுதியில் எப்போதும் சுற்றித் திரிபவர்கள்தான் என்று ரெயில் நிலைய பகுதியில் வியாபாரம் செய்து வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜான்சன் அடித்து இழுத்துச்செல்லப்படுவதை சிலர் நேரில் பார்த்துள்ளனர். அவர்கள் சொன்ன சாட்சியங்களின் அடிப்படையிலேயே கொலையாளிகள் இவர்கள் தான் என்று முடிவு செய்துள்ளோம். 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒருவர் மட்டும் யார் என்று தெரியவில்லை.
அவரது முகத்தில் வெட்டுக்காயம் இருந்ததாக நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். இந்த அடையாளத்தை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையாளிகளை கைது செய்து வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இச்சம்பவத்துக்கு பின்னர் ரெயில் நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பயணிகள் அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment